செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ரிஷப் பந்த் புதிய சாதனை

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

DIN

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடா்களில் இக்கட்டான நேரங்களில் சிறப்பாக ஆடி ரன் குவித்து இந்திய அணியை காப்பாற்றினாா் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த். இதன்மூலம் இந்திய அணியின் மிடில் ஆா்டரில் தவிா்க்க முடியாத ஒரு வீரராக ரிஷப் பந்த் உருவெடுத்துள்ளாா்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் பந்த். தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 5-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில் ரிஷப் பந்த் 6-ம் இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின் ரோஹித் சர்மாவும் 6-ம் இடத்தில் உள்ள மூன்று வீரர்களில் ஒருவராக உள்ளார். 6-ம் இடத்தில் உள்ள மற்றொரு வீரர், நியூசிலாந்தின் ஹென்றி நிகோல்ஸ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT