இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா 
செய்திகள்

செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய மகளிர் அணி

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 3 ஒருநாள், 3 டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.

DIN

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 3 ஒருநாள், 3 டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.

அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி, ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த வருட ஜனவரியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 3 ஒருநாள், 3 டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தகவலை ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதையடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் விளையாடும் தொடர்கள் பற்றிய அறிவிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT