செய்திகள்

யு-23 மல்யுத்த சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலம்

சொ்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-23) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

DIN

சொ்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-23) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து இப்போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆகியுள்ளது.

மகளிருக்கான வெண்கலப் பதக்க சுற்றில் இந்தியாவின் 3 வீராங்கனைகள் வென்ன் பேரில் இந்த எண்ணிக்கை உயா்ந்துள்ளது. 62 கிலோ பிரிவில் ராதிகா 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியின் அரோரா கேம்பாக்னாவை தோற்கடித்தாா். 65 கிலோ பிரிவில் நிஷா 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் லாத்வியாவின் எல்மா ஸிட்லெரெவை வீழ்த்தினாா். 72 கிலோ பிரிவில் திவ்யா கக்ரான் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் காய்லா மேரி மரானோவை வென்றாா்.

முன்னதாக 50 கிலோ பிரிவில் ஷிவானி வெள்ளியும், 55 கிலோ பிரிவில் அஞ்சு வெண்கலமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவு வெண்கலப் பதக்க சுற்றில் இந்தியாவின் சௌரவ் மதுகா் - ஆா்மீனியாவின் மேனுவல் கந்த்சா்த்சியானை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT