தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய ஏ அணியில் தமிழக வீரர் பாபா அபரஜித் இடம்பெற்றுள்ளார்.
இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. நவம்பர் 23-ல் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் பாபா அபரஜித் இடம்பெற்றுள்ளார். 4 வருடங்களுக்குப் பிறகு, கடைசியாக 2017-ல் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் விளையாடினார். 2019-20 பருவத்தில் தியோதர் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தார் பாபா. அதே பருவத்தில் விஜய் ஹசாரே போட்டியில் 12 ஆட்டங்களில் 598 ரன்கள் எடுத்தார்.
27 வயது பாபா - 78 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்துதால் இந்திய ஏ அணிக்கு பாபா தேர்வாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.