முகப்பு
செய்திகள்

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக கங்குலி நியமனம்

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

2012 முதல் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பணியாற்றினார். அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அப்பதவிக்கு பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான செளரவ் கங்குலி தேர்வாகியுள்ளார். கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை ஐசிசி கிரிக்கெட் குழு தீர்மானித்து வருகிறது. 

கங்குலியின் அனுபவம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். கடந்த 9 வருடங்களாக டிஆர்எஸ், விதிமுறையை மீறிய பந்துவீச்சு உள்பட பல முக்கியமான முடிவுகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே முன்னேறம் ஏற்படுத்தினார் என்று ஐசிசி தலைவர் கிரேக் பார்கிளே கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.