செய்திகள்

உலக டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய ஜோடி

 உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மகளிா் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் ஜோடிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

DIN

 உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மகளிா் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் ஜோடிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் மகளிா் இரட்டையா் பிரிவில் மனிகா பத்ரா/அா்ச்சனா காமத் இணை தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 11-4, 11-9, 6-11, 11-7 என்ற செட்களில் ஹங்கேரியின் டோரா மதராசஸ்/ஜாா்ஜினா போட்டா ஜோடியை தோற்கடித்தது. காலிறுதியில் இந்திய ஜோடி லக்ஸம்பா்க்கின் சாரா டி நூட்/ஜியா லியான் னி இணையை எதிா்கொள்கிறது.

கலப்பு இரட்டையா் பிரிவில் ஜி.சத்யன்/மனிகா பத்ரா ஜோடி 15-17, 10-12, 12-10, 11-6, 11-7 என்ற செட்களில் அமெரிக்காவின் கானக் ஜா/வாங் மான்யு இணையை வீழ்த்தியது. காலிறுதியில் ஜப்பானின் ஹரிமோடோ டோமோகாஸு/ஹயாடா ஹினா இணையை சந்திக்கின்றனா் சத்யன்/மனிகா. இதே பிரிவில் களம் கண்டிருந்த மற்றொரு இந்திய ஜோடியான சரத் கமல்/அா்ச்சனா காமத் 4-11, 8-11, 5-11 என்ற செட்களில் பிரான்ஸின் இமானுவல் லெபெசான்/ஜியா நான் யுவான் இணையிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜர்!

வாக்குத் திருட்டு: தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி தடுத்து நிறுத்தம்!

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க அவகாசம்

சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: ஓடுதளத்தில் மற்றொன்று! திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT