செய்திகள்

16 வயதில் ஒருநாள் சதம்: உலக சாதனை படைத்த வீராங்கனை (விடியோ)

DIN

தனது 16-வது பிறந்த நாளின்போது சதமடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் அயர்லாந்து வீராங்கனை எமி ஹண்டர்.

ஹராரேவில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. தனது 16-வது பிறந்த நாளின்போது சதமடித்த அயர்லாந்து வீராங்கனை எமி ஹண்டர், 121 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவரை அவர் 4 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இதன்பிறகு பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் மட்டும் எடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என அயர்லாந்து அணி வென்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் சதமடித்த எமி ஹண்டர், புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இளம் வயதில் சதமடித்தவர்  என்கிற பெருமை இதற்கு முன்பு இந்தியாவின் மிதாலி ராஜிடம் இருந்தது. அவர் 16 வருடங்கள் 205 நாள்களில் சதமடித்திருந்தார். தனது 16-வது பிறந்த நாளின்போது சதமடித்த எமி ஹண்டர், புதிய உலக சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். 

இளம் வயதில் சதமடித்தவர்கள்

எமி ஹண்டர் - 16 வருடங்கள்
மிதாலி ராஜ் - 16 வருடங்கள், 205 நாள்கள்
சாஹித் அப்ரிடி - 16 வருடங்கள், 217 நாள்கள்

சதமடித்த ஆட்டத்தின் விடியோ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT