செய்திகள்

ஜம்மு - காஷ்மீர் டி20 அணியில் இடம்பெற்றுள்ள ஐபிஎல் போட்டியின் அதிவேகப் பந்துவீச்சாளர்

DIN

ஐபிஎல் போட்டியில் அதிவேகமாகப் பந்துவீசி கவனம் பெற்ற இளம் வீரர் உம்ரான் மாலிக், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. இப்போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2021 போட்டியில் மணிக்கு 150 கி.மீ.க்கும் அதிகமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்தார் ஓர் இளம் இந்தியப் பந்துவீச்சாளர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த 21 வயது உம்ரான் மாலிக், ஆர்சிபி அணிக்கு எதிராக மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 2-வது அதிவேகப் பந்துவீச்சு அதுதான். (முதல் இடம் ஃபெர்குசனுக்கு - 153.63 கி.மீ.)  

கரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார் உம்ரான் மாலிக். முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே 151.03 கி.மீ வேகத்துக்குப் பந்துவீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 2-வது ஆட்டத்தில் இன்னும் அதிகவேகமாகப் பந்துவீசி, ஐபிஎல் 2021 போட்டியில் வேகமாகப் பந்துவீசிய வீரர்களில் ஒருவர் என்கிற பெருமையைப் பெற்றார். ஐபிஎல் 2021 போட்டியின் அதிவேகப் பந்துவீச்சுப் பட்டியலில் முதல் 8 இடங்களில் 4 இடங்களை உம்ரான் மாலிக் பிடித்தார். 3 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 8.00.

இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணியில் சன்ரைசர்ஸ் வீரர்களான அப்துல் சமத்தும் உம்ரான் மாலிக்கும் இடம்பெற்றுள்ளார்கள். துணை கேப்டனாக அப்துல் சமத் தேர்வாகியுள்ளார். உம்ரான் மாலிக், ஜம்மு - காஷ்மீர் அணியில் இடம்பெற்றுள்ளதால் அவருடைய பந்துவீச்சு உள்ளூர் போட்டியில் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கவுள்ளார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக் தற்போது செயல்பட்டு வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT