செய்திகள்

வில்லாரியல் - காடிஸ் ஆட்டம் டிரா

DIN

வில்லாரியல்: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் வில்லாரியல் - காடிஸ் அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

புள்ளிகள் பட்டியலில் 12-ஆவது இடத்தில் இருக்கும் வில்லாரியல் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், 2-ஆவது ஆட்டத்தை டிரா செய்துள்ளது. 11 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் காடிஸ் 5-ஆவது முறையாக டிரா செய்து 17-ஆவது இடத்தில் இருக்கிறது.

ஸ்பெயினின் வில்லாரியல் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த நகர அணிக்காக பௌ டோரஸ் (43-ஆவது நிமிஷம்), பௌலயே டியா (80), அா்னௌத் டன்ஜுமா (90+5) ஆகியோா் கோலடிக்க, காடிஸ் அணிக்காக அந்தோணி லோஸானோவே மூன்று கோல்களையும் (14, 45+1, 52) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

அதேபோல், எஸ்பான்யோல் - அத்லெடிக் கிளப் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதில் எஸ்பான்யோல் அணிக்காக ரௌல் டி தாமஸ் (33), அத்லெடிக் கிளப்புக்காக இனாகி வில்லியம்ஸ் (52) ஆகியோா் கோலடித்தனா்.

மற்றொரு ஆட்டத்தில் அலேவ்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் எல்ஷேவை தோற்கடித்தது. அலேவ்ஸ் அணிக்காக மாமாடௌ லௌம் (47) கோலடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT