கோப்புப்படம் 
செய்திகள்

5-வது டெஸ்ட் நாளை நடைபெறுமா? தலையெழுத்தைத் தீர்மானிக்க இருக்கும் பரிசோதனை முடிவுகள்

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவது கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படவுள்ளது.

DIN


இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவது கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படவுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"ஆட்டம் குறித்த தெளிவான பார்வை இந்திய நேரப்படி நள்ளிரவுதான் தெரியவரும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கரோனா பரிசோதனை முகமை மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவு இங்கிலாந்து நேரப்படி இரவு 8 மணியளவில் வரும்.

பிசியோதெரபிஸிட் நிதின் படேல் தனிமையில் இருந்ததால் கடந்த சில நாள்களாக யோகேஷ் பர்மர் இந்திய வீரர்களுடன் செயல்பட்டு வந்தார். அவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும்."

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதில் 4-வது ஆட்டத்தின் நடுவே இந்திய அணியின் பயிற்சியாளர்கள் ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT