முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள்: 225 ரன்கள் எடுத்த இந்திய மகளிர் அணி

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் என...

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் என மூன்று தொடர்களில் பங்கேற்கிறது இந்திய மகளிர் அணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் மெக்கேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கேப்டன் மிதாலி ராஜ்63 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.  டார்சி பிரெளன் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, 22 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.