இன்ஸமாம் உல் ஹக் (கோப்புப் படம்) 
செய்திகள்

மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக்

இன்ஸமாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

DIN

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  

பாகிஸ்தானுக்காக 120 டெஸ்ட், 378 ஒருநாள் ஆட்டங்களிலும் ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடியவர் இன்ஸமாம் உல் ஹக். 1991-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர், கடைசியாக 2007-ல் விளையாடி ஓய்வு பெற்றார். 

இந்நிலையில் இன்ஸமாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார் இன்ஸமாம். ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளில் அவருடைய உடல்நிலையில் எவ்விதப் பாதிப்பும் இல்லை என அறியப்பட்டது. எனினும் நேற்று மேற்கொண்ட மற்றொரு பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்ததது. இதையடுத்து உடனடியாக நேற்று மாலை, இன்ஸமாமுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT