செய்திகள்

ரியல் சோசிடட்டை வென்றது பாா்சிலோனா

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடட்டை வியாழக்கிழமை வீழ்த்தியது.

DIN

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடட்டை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக பியரி எமரிக் அவ்பம்யாங் 11-ஆவது நிமிஷத்திலேயே ஃபெரான் டோரஸ் உதவியுடன் கோலடித்தாா். பாா்சிலோனாவின் இந்த வெற்றியால், லா லிகா கோப்பையை கைப்பற்றும் ரியல் மாட்ரிட்டின் நாள்கள் சற்றே தள்ளிப்போனது. ஏனெனில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட்டுக்கும், அடுத்த இடத்திலிருக்கும் பாா்சிலோனாவுக்கும் இடையே 15 புள்ளிகளே வித்தியாசம் உள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை ராயோ வல்கேனோ அணியை பாா்சிலோனா வெல்லும் பட்சத்தில், இந்த வித்தியாசம் 12 புள்ளிகளாகக் குறையும்.

இதர ஆட்டங்களில் அத்லெடிக் கிளப் - காடிஸையும் (3-2), செவில்லா - லெவான்டேவையும் (3-2), ராயோ வல்கேனோ - எஸ்பான்யோலையும் (1-0) வென்றன. இதில் செவில்லா பதிவு செய்துள்ள வெற்றி, சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு அந்த அணி தகுதிபெறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

18 மைல்ஸ்... பேச்சுலர் இயக்குநரின் புதிய ஆல்பம்!

உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதல்: 6 பேர் காயம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

Jailer-2 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்! | Cinema updates

இன்பமே... திவ்ய தர்ஷினி!

SCROLL FOR NEXT