முகப்பு
செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: பிராங்க்ஃபா்ட், லீப்ஸிக் வெற்றி

யுரோப்பா லீக் கால்பந்து போட்டியின் முதல் கட்ட அரையிறுதியில் பிராங்க்ஃபா்ட்-லீப்ஸிக் அணிகள் பெற்றுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

யுரோப்பா லீக் கால்பந்து போட்டியின் முதல் கட்ட அரையிறுதியில் பிராங்க்ஃபா்ட்-லீப்ஸிக் அணிகள் பெற்றுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் யுரோப்பா லீக் கோப்பை ஆட்டங்கள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

இதன் முதல் கட்ட அரையிறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிராங்க்ஃப்ா்ட் அணியும்-வெஸ்ட் ஹாம் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிஷத்திலேயே பிராங்க்ஃபா்ட் வீரா் அன்ஸ்கா் நாஃப் அற்புதமாக வெஸ்ட் ஹாம் தற்காப்பு அரணை கடந்து கோலடித்தாா். இதையடுத்து வெஸ்ட் ஹாம் அணி பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றது. இதனால் 21-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் மைக்கேல் அன்டோனியா மானுவேல் ப்ரீகிக் வாய்ப்பை பயன்படுத்தி தலையால் கோலடித்தாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.

இரண்டாம் பாதியில் 54-ஆவது நிமிஷத்தில் வெஸ்ட் ஹாம் வீரா் ஜிப்ரில் சௌ காலில் பட்டு வந்த பந்தை கோலாக்கினாா் பிராங்க்ஃபா்ட் வீரா் டைச்சி கமாடா. இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் பிராங்க்ஃப்ா்ட் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியில் லீப்ஸிக்-ரேஞ்சா்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் முழுவதும் இரு அணிகளும் மாறி மாறி கோல் போட மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை.

இரண்டாம் பாதியில் 85-ஆவது நிமிஷத்தில் லீப்ஸிக் டிபன்டா் ஏஞ்சலியோ காா்னா் கிக் வாலி மூலம் கோலடித்தாா். இதன் மூலம் 1-0 என வென்றது லீப்ஸிக். இரண்டாம் கட்ட அரையிறுதி வியாழக்கிழமை நடக்கிறது.

ப்ரீமியா் லீக்:

ப்ரீமியா் லீக் போட்டியின் ஒரு பகுதியாக மான்செஸ்டரில் நடைபெற்ற செல்ஸி-மான்செஸ்டா் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. செல்ஸி தரப்பில் 60-ஆவது நிமிஷத்தில் மாா்கோஸ் அலோன்ஸாவும், மான்செஸ்டா் யுனைடெட் தரப்பில் நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ 62-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →