சாய் சுதர்சன் (கோப்புப் படம்) 
செய்திகள்

டிஎன்பிஎல் டி20 போட்டி: கோப்பையை வென்ற இரு அணிகள்!

கோயம்புத்தூரில் நடைபெற்ற டிஎன்பில் டி20 போட்டியின் இறுதிச் சுற்று மழை காரணமாகப் பாதிக்கப்பட்டதால்...

DIN

கோயம்புத்தூரில் நடைபெற்ற டிஎன்பில் டி20 போட்டியின் இறுதிச் சுற்று மழை காரணமாகப் பாதிக்கப்பட்டதால் கோவை, சேப்பாக் அணிகள் கோப்பையைப் பகிர்ந்துகொண்டன.

டிஎன்பிஎல் 2022 போட்டியின் இறுதிச்சுற்றில் லைகா கோவை கிங்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. கெளசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஷாருக் கான் தலைமையிலான கோவை அணி, 17 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 65 ரன்கள் எடுத்தார். சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேப்பாக் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தபோது மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆட்டத்தைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதால் டிஎன்பிஎல் கோப்பையை கோவை, சேப்பாக் ஆகிய இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன. 5-வது ஓவர் மட்டும் வீசி முடிக்கப்பட்டிருந்தால் சேப்பாக் அணி தோல்வியடைந்திருக்கும். ஏனெனில் அந்த அணி 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 24 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இறுதிச்சுற்றுக்கான ஆட்ட நாயகன் விருதை சந்தீப் வாரியரும் தொடர் நாயகன் விருதை சஞ்சய் யாதவும் வென்றார்கள். டிஎன்பிஎல் கோப்பையை சேப்பாக் அணி 4-வது முறையாக வென்றுள்ளது. கோவை அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT