பவுல்ஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல் 
செய்திகள்

காமன்வெல்த்: இந்தியாவுக்கு 4வது தங்கம்

காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

DIN

காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

இறுதிப்போட்டியில் 17 - 10 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. லான் பவுல்ஸ் பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டின் பா்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஐந்தாவது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

அந்தவகையில் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 17 - 10 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. 

இதன் மூலம் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் லான் பவுல்ஸ் பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவுக்கு நான்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

காமன்வெல்த் போட்டியில், இதுவரை  4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

பேரூா் தமிழ்க் கல்லூரியில் தமிழ் மன்றம், தொல்லியல் வகுப்பு தொடக்கம்

மதுக்கரை சுங்கச் சாவடியில் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்கு

SCROLL FOR NEXT