செய்திகள்

காமன்வெல்த்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 2வது தங்கம்

DIN

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் ஐந்தாவது நாளான இன்று, இந்தியா இரண்டாவது தங்கம் வென்றுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பா்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஐந்தாவது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி சிங்கப்பூர் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 10-12, 11-7, 7-11, 4-11 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூர் அணியை இந்திய அணி வீழ்த்தியது. சத்யன் ஞானசேகரனின் சிறப்பான ஆட்டத்தால், 3-1 என்ற விகிதத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. 

இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகிய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுவரை, மொத்தமாக இந்தியா அணி காமன்வெல்த் போட்டியில் 5 தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா இன்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT