செய்திகள்

காமன்வெல்த்: உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்று இந்திய வீரர் சாதனை (விடியோ)

காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதல் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

DIN

காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதல் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

23 வயது தேஜஸ்வின் சங்கர், 2.22 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்தியத் தடகள அணியில் தேஜஸ்வின் சங்கரின் பெயர் முதலில் இடம்பெறவில்லை. இந்தியாவில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் அவர் கலந்துகொள்ளாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனக்கான அனுமதியைப் பெற்றார் தேஜஸ்வின் சங்கர். இறுதியில் பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆஸி. கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் சகோதரர் பிராண்டன் ஸ்டார்க், இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் விஜய் சேதுபதி?

“அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசுகிறார்” ஆளுரைச் சாடிய முதல்வர்!

TVK விஜய் வீட்டில் செங்கோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 26.11.25

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் ராகுல் சந்திப்பு!

முன்னணி பான் மசாலா குடும்பத்தின் மருமகள் தற்கொலை!

SCROLL FOR NEXT