காமன்வெல்த் பாட்மிண்டன்: தங்கம் வென்றார் இந்தியாவின் லக்ஷயா சென்
2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 20-வது தங்கம் இது.
காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென்னும் மலேசியாவின் என்ஜி ஸி யாங்கும் மோதினார்கள். முதல் கேமை மலேசிய வீரர் 21-19 என வென்றார். அடுத்த கேமை 21-9 என வென்ற லக்ஷயா சென் கடைசி கேமிலும் ஆதிக்கம் செலுத்தி 19-21, 21-9, 21-16 என இறுதிச்சுற்றை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்ற நிலையில் ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர் தங்கம் வென்றுள்ளார்.
Advertisement
Advertisement
2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 20-வது தங்கம் இது. இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.