இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரணவ்.
செஸ் கிராண்ட்மாஸ்டராக மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையை 2021-ல் எட்டிய பிரணவ், கடந்த ஜூனில் புதாபெஸ்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் 2-ம் நிலையை எட்டினார். இந்நிலையில் ரொமானியாவில் நடைபெற்ற செஸ் போட்டியை வென்ற பிரணவ், 3-ம் நிலையை அடைந்து இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். ரொமானியாவில் நடைபெற்ற லிம்பேடியா செஸ் போட்டியில் 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனதுடன் கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியையும் அவர் பூர்த்தி செய்தார். சென்னை வேலம்மாள் பள்ளியில் பயின்று வரும் பிரணவின் பயிற்சியாளர் காமேஷ் விஸ்வேஸ்வரன்.
பிரணவ், தமிழ்நாட்டின் 27-வது செஸ் கிராண்ட்மாஸ்டர். அதாவது இந்தியாவிலுள்ள 75 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 27 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். தற்போது 75-வது கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் தருணத்தில் கிராண்ட்மாஸ்டராகி தமிழகத்துக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார் பிரணவ்.
மாநிலங்கள் வழங்கிய செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்
 
| மாநிலங்கள் | கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை | 
| தமிழ்நாடு | 27 | 
| மஹாரஷ்டிரம் | 10 | 
| மேற்கு வங்கம் | 9 | 
| தில்லி | 6 | 
| தெலங்கானா | 5 | 
| ஆந்திரப் பிரதேசம் | 4 | 
| கேரளா | 3 | 
| கர்நாடகம் | 3 | 
| ஒடிஷா | 2 | 
| குஜராத் | 2 | 
| கோவா | 2 | 
| ராஜஸ்தான் | 1 | 
| ஹரியாணா | 1 | 
| மொத்தம் | 75 | 
தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்
| 1. |  விஸ்வநாதன் ஆனந்த் (1988, இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர்)  | 
| 2. |  சசிகிரண் (2000, இந்தியாவின் 5-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 3. |  ஆர்.பி. ரமேஷ் (2004, இந்தியாவின் 10-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 4. |  மகேஷ் சந்திரன் (2006, இந்தியாவின் 12-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 5. |  தீபன் சக்ரவர்த்தி (2006, இந்தியாவின் 13-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 6. |  அருண் பிரசாத்  (2008, இந்தியாவின் 18-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 7. |  எஸ். கிடாம்பி  | 
| 8. |  ஆர்.ஆர். லக்ஷ்மண் (2009, இந்தியாவின் 20-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 9. |  அதிபன் (2010, இந்தியாவின் 23-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 10. |  எஸ்.பி. சேதுராமன்  | 
| 11. |  எம்.ஆர். வெங்கடேஷ்  | 
| 12. |  ஷ்யாம் சுந்தர் (2013, இந்தியாவின் 31-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 13. |  விஷ்ணு பிரசன்னா  | 
| 14. |   அரவிந்த் சிதம்பரம் (2015, இந்தியாவின் 37-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 15. |  கார்த்திகேயன் முரளி  | 
| 16. |  அஸ்வின் ஜெயராம் (2015, இந்தியாவின் 39-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 17. |  பிரியதர்ஷன் (2016, இந்தியாவின் 44-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 18. | ஸ்ரீநாத் நாராயணன் (2017, இந்தியாவின் 46-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 19. |  பிரக்ஞானந்தா (2018, இந்தியாவின் 52-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 20. |  கார்த்திகேயன்  | 
| 21. | என்.ஆர். விசாக் (2019, இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
| 22. |  குகேஷ்  | 
| 23. |  இனியன்  | 
| 24. |  ஆகாஷ் கணேசன்  | 
| 25. |  அர்ஜுன் கல்யாண்  | 
| 26. |  பரத் சுப்ரமணியன்  | 
| 27. |  பிரணவ் (2022, இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர்)  | 
இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இருந்தாலும் இதுவரை 13 மாநிலங்களில் இருந்து மட்டுமே செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் கிடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக மஹாராஷ்டிரமும் மேற்கு வங்கமும் அதிக கிராண்ட்மாஸ்டர்களைத் தந்துள்ளன.
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீஹார், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இதுவரை ஒரு கிராண்ட்மாஸ்டரும் நமக்குக் கிடைக்கவில்லை. செஸ்ஸைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ள ஆங்கில அறிவும் அவசியம் என்பதால் இதுவும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. எனினும் செஸ்பேஸ் போன்ற செஸ் தளங்கள் தற்போது ஹிந்தியிலும் இயங்குவதால் விரைவில் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய செஸ்ஸின் வளர்ச்சி
| வருடம் | இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் எண்ணிக்கை | 
| 1988 | 1 | 
| 1991 | 1 | 
| 1997 | 1 | 
| 2000 | 2 | 
| 2001 | 1 | 
| 2002 | 1 | 
| 2003 | 2 | 
| 2004 | 2 | 
| 2005 | 0 | 
| 2006 | 4 | 
| 2007 | 1 | 
| 2008 | 2 | 
| 2009 | 2 | 
| 2010 | 3 | 
| 2011 | 2 | 
| 2012 | 4 | 
| 2013 | 6 | 
| 2014 | 1 | 
| 2015 | 5 | 
| 2016 | 3 | 
| 2017 | 6 | 
| 2018 | 8 | 
| 2019 | 7 | 
| 2020 | 2 | 
| 2021 | 5 | 
| 2022 | 3 | 
| மொத்தம் | 75 | 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.