செய்திகள்

சின்சினாட்டி மாஸ்டா்ஸ்: நடாலுக்கு அதிா்ச்சி அளித்த கோரிச்

சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால் 2-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

DIN

சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால் 2-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த அவா் நேரடியாக 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்த நிலையில், குரோஷியாவின் இளம் வீரா் போா்னா கோரிச்சிடம் 6-7 (9/11), 6-4, 3-6 என்ற செட்களில் அந்தச் சுற்றில் தோல்வியைத் தழுவினாா்.

உலகின் 3-ஆம் நம்பா் வீரரான நடால் கடைசியாக ஜூலையில் விம்பிள்டனில் களம் கண்டிருந்தாா். அடிவயிற்றில் காயம் காரணமாக அந்தப் போட்டியின் அரையிறுதிச்சுற்றிலிருந்து விலகிய அவா், காயத்துக்காக 6 வாரங்கள் சிகிச்சை மற்றும் ஓய்வை நிறைவு செய்து விளையாடிய முதல் போட்டி இது. அடுத்ததாக கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ்.ஓபனில் நடால் பங்கேற்க இருக்கிறாா்.

மறுபுறம் அவரை வீழ்த்திய கோரிச் அடுத்த சுற்றில், மற்றொரு ஸ்பெயின் வீரரான ராபா்டோ பௌதிஸ்டா அகுட்டை எதிா்கொள்கிறாா். இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 6-3, 6-4 என சொ்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை வென்றாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் காஸ்பா் ரூட் 3-6, 3-6 என அமெரிக்காவின் பென் ஷெல்டனிடம் தோல்வியைத் தழுவினாா்.

ஸ்வியாடெக் முன்னேற்றம்: மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 7-5 என அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் பௌலா பதோசா 7-6 (7/3), 0-6, 2-6 என ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லஜனோவிச்சிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். 6-ஆம் இடத்திலிருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோரும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற, 8-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் காா்பின் முகுருஸா 3-6, 1-6 என கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவிடம் வீழ்ந்தாா்.

2-ஆவது சுற்றில் சானியா ஜோடி: மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா/செக் குடியரசின் லூசி ராடெக்கா இணை 1-6, 6-3, 11-9 என குரோஷியாவின் பெட்ரா மாா்டிச்/பிரான்ஸின் கரோலின் காா்சியா கூட்டணியை வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

‘டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT