செய்திகள்

டர்கிஷ் சூப்பர் லீக்: 4-வது சுற்றில் குகேஷ் தோல்வி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு டர்கிஷ் சூப்பர் லீக் சர்வதேசப் போட்டியில் பங்கேற்றுள்ளார் குகேஷ்.

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முடிவில் உலகின் நெ. 24 வீரராக இருந்த குகேஷ், தற்போது உலகின் நெ. 20 வீரராக  முன்னேற்றம் அடைந்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோா் தங்கம் வென்றனா். 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய 11 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்ற குகேஷ், இரு ஆட்டங்களை டிரா செய்து ஓர் ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு குகேஷ் கலந்துகொள்ளும் போட்டிகள் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

குகேஷ் செஸ் தரவரிசை

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு டர்கிஷ் சூப்பர் லீக் சர்வதேசப் போட்டியில் பங்கேற்றுள்ளார் குகேஷ். இந்தப் போட்டியின் முதல் மூன்று ஆட்டங்களிலும் குகேஷ் வெற்றி பெற்றார். எனினும் 4-வது சுற்றில் குகேஷ் தோல்வியடைந்தார். ரஷியாவின் கொபாலியா மைக்கேலிடம் 48-வது நகர்த்தலில் அவர் தோல்வியடைந்தார். புள்ளிகள் பட்டியலில் 3 புள்ளிகளில் 7-ம் இடத்தில் உள்ளார் குகேஷ்.

சமீபத்திய வெற்றிகளால் குகேஷின் ஈஎல்ஓ தரவரிசை  2735.9 என உயர்ந்துள்ளது. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்த பிறகு 2725. புள்ளிகளுடன் தரவரிசையில் 24-வது இடத்தில் இருந்தார் குகேஷ். தற்போது 2729.3 புள்ளிகளுடன் 20-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு அவர் 18-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 20-வது இடத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..? பி.விஸ்வநாதன், செயலர், அகில இந்திய காங்கிரஸ்.

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

"குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளது' குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

SCROLL FOR NEXT