செய்திகள்

இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடை நீக்கம்: உற்சாகத்தில் கால்பந்து ரசிகர்கள்

இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

DIN

இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்திய கால்பந்து நிா்வாகத்தில் தேவையற்ற 3-ஆம் தரப்பு தலையீடு இருப்பதாகக் கூறி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) இடைக்காலத் தடை விதித்து சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இந்திய கால்பந்து வரலாற்றில் ஏற்பட்ட முதல் தடை நடவடிக்கையால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 

தொடர்ந்து தேர்தல் நடத்தபடாமல் பிரஃபுல் படேல் தலைவராக நீடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதன்காரணமாக இந்தியக் கால்பந்து சம்மேளனத்தில் தேவையற்ற மூன்றாம் நபர் தலையீடு இருப்பதாகத் தெரிவித்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் இதன்காரணமாக சுதந்திரமான செயல்பாட்டுக்கு தடை இருப்பதாகக் கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

உடனடியாக அமலுக்கு வந்த இந்தத் தடையால் அக்டோபர் மாதம்  இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டிருந்த 17 வயதுக்கு உள்பட்ட (யு-17) மகளிருக்கான உலகக் கோப்பை போட்டியையும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட புதிய குழுவைத் தொடர்ந்து இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடையை பிஃபா நீக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை பிஃபா வெளியிட்டது.

இதன்மூலம் 17 வயதுக்குட்பட்ட இளையோர் மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT