செய்திகள்

யு.எஸ். ஓபன்: முதல் சுற்றில் பிரபல வீராங்கனை தோல்வி

DIN

யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரபல வீராங்கனை ஒசாகா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜப்பானின் ஒசாகா, 2018, 2020 ஆகிய வருடங்களில் யு.எஸ். ஓபன் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில் இந்த வருட யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் டேனியல் காலின்ஸை எதிர்கொண்டார். இந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய காலின்ஸ், இந்த ஆட்டத்தில் 7-6 (5), 6-3 என நேர் செட்களில் ஒசாகாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

கடந்த வருடம் யு.எஸ். ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த ஒசாகா, 3-வது சுற்றில் லேலா ஃபெர்னாண்டஸிடம் தோற்றார். இந்த வருடம் ஆஸி. ஓபன் போட்டியில் 3-வது சுற்றிலும் பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல் சுற்றிலும் தோல்வியடைந்தார். விம்பிள்டனில் பங்கேற்கவில்லை. இதனால் தரவரிசையில் 44-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT