சோகத்தில் ஜெர்மனி வீரர்கள் 
செய்திகள்

உலகக் கோப்பை: வெளியேறிய இரு பெரிய அணிகள்!

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான பெல்ஜியமும் ஜெர்மனியும்...

DIN


கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான பெல்ஜியமும் ஜெர்மனியும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளன.

நேற்றைய ஆட்டங்களில் கனடாவை மொராக்கோ 2-1 எனவும் ஸ்பெயினை ஜப்பான் 2-1 எனவும் கோஸ்டா ரிக்காவை ஜெர்மனி 4-2 எனவும் வீழ்த்தின. குரோஷியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது. 

குரூப் ஈ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த ஜப்பானும் ஸ்பெயினும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன. 2014-ல் உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனியும் கோஸ்டா ரிக்காவும் வெளியேறின. நேற்றைய ஆட்டத்தில் வெற்றி கிடைத்தாலும் ஜெர்மனியால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. தோற்றாலும் 2-ம் இடம் பிடித்ததால் ஸ்பெயின் தகுதி பெற்றது.  ஜெர்மனி அணியும் ஸ்பெயின் போல 4 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ஸ்பெயின் தகுதியடைந்தது. 

குரூப் எஃப் பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த மொராக்கோவும் குரோஷியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. பெல்ஜியம், கனடா அணிகள் தகுதி பெறவில்லை. தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி நேற்று குரோஷியாவை வீழ்த்த முடியாத காரணத்தால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 

4 முறை உலகக் கோப்பைகளை வென்ற ஜெர்மனி அணியும் நெ.2 அணியான பெல்ஜியமும் ஒரே நாளில் போட்டியை விட்டு வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் உண்டியல் திறப்பு

டிக்கெட் பரிசோதகா் தாக்கப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

டிச.12, 13-இல் வேலூரில் அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்: அரசியல் கட்சி பிரதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

யுபிஎஸ்சி சாா்பில் சதாப்தி சம்மேளனம் நிகழ்ச்சி தில்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது

SCROLL FOR NEXT