செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்கதேச கேப்டனாக லிடன் தாஸ் நியமனம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்கதேச அணியின் கேப்டனாக லிடன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்கதேச அணியின் கேப்டனாக லிடன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. அதில் முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால், விலகியுள்ளார். 

புதன்கிழமை பயிற்சி ஆட்டத்தின் போது தமீம் இக்பாலுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். மேலும் தமிம் இக்பாலுக்கு பதிலாக அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதனிடையே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்கதேச அணியின் கேப்டனாக லிடன் தாஸ் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் கேப்டன் விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

வங்கதேச அணி: லிடன் தாஸ்(கேப்டன்), அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, மஹ்முதுல்லா, நுருல் ஹசன், அஃபிஃப் ஹுசைன், யாசிர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது, ஹசன் மஹ்முது, முஸ்தாபிசுர் ரஹ்மான், எபடாட் ஹுசைன், நசும் அஹமது. ஷோரிஃபுல் இஸ்லாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் ரூ.81.40 கோடி மதிப்பீட்டில் தங்க நகைப் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

தமிழ்நாட்டின் மிக நீளமான ஜி.டி. நாயுடு மேம்பாலம்: முதல்வா் திறந்துவைத்தாா்

அவிநாசி மேம்பாலம்: 95 சதவீத பணிகளை முடித்தது திமுக அரசே -அமைச்சா் எ.வ.வேலு

சாத்தூரில் வீணாகும் குடிநீா்

வேளாண்மைப் பல்கலை.யில் முதுநிலை, முனைவா் படிப்பு மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT