செய்திகள்

டெஸ்ட் கனவு: மும்பை ரஞ்சி அணியில் சூர்யகுமார் யாதவ்!

இந்திய அணிக்காக 16 ஒருநாள், 42 ஒருநாள் ஆட்டங்களில் இதுவரை விளையாடியுள்ளார். 

DIN

32 வயது சூர்யகுமார் யாதவ், நெ.1 டி20 பேட்டராக உள்ளார். இந்திய அணிக்காக 16 ஒருநாள், 42 ஒருநாள் ஆட்டங்களில் இதுவரை விளையாடியுள்ளார். 

77 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள சூர்யகுமாரின் கனவு, இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவது. இதற்காக 2022-23 ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாட முடிவெடுத்துள்ளார். இதையடுத்து ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணியில் சூர்யகுமார் இடம்பெற்றுள்ளார். 

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு காரணமாக சூர்யகுமார் இடம்பெறவில்லை. இதையடுத்து மும்பை ரஞ்சியில் அணியில் சேர்க்கப்பட்டுள்ள சூர்யகுமார், ஹைதராபாத்துக்கு எதிரான மும்பையின் 2-வது ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளார். 

கடந்த வருடம் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யகுமார். எனினும் டெஸ்டில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT