செய்திகள்

இஷான் கிஷன், கோலி அதிரடி: வங்கதேசத்திற்கு 410 ரன்கள் இலக்கு!

DIN


இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.

3வது போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி கலமிறங்கியது. இஷான் கிஷன், குல்தீப் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே வங்கதேசம் இந்த தொடரில் 2-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாட தொடங்கினார். இவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலியும் 250 ரன்களுக்கு அதிகமாக பார்னர்ஷிப் அமைத்தனர். இஷான் கிஷன் அதிரடியாக 131 பந்துகளில் 210 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகள் அடங்கும்.

விராட் கோலியும் தனது பங்குக்கு 91 பந்துகளில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். 3 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலி ஒருநாள் போட்டியில் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது. ஸ்ரேயஷ் ரன்கள், கே.எல்.ராகுல் 8 ரன்கள், அக்‌ஷர் படேல் 20 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் குல்தீப் யாதவ் 3 ரனளுடன் ஆட்டத்தை முடித்தனர். வாஷிங்டன் சுந்தர் 3வது முறையாக ஷபிக் ஓவரில் இந்த தொடரில் ஆட்டமிழக்கிறார்.

வங்கதேச அணியில் ஷபிக் ஹல் ஹசன்,  ஹொசைன், டஸ்கின் அஹமது தலா 2 விக்கெட்டுகளையும், மெஹதி ஹாசன், முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 1 விக்கெடையும் வீழ்த்தினர்.

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT