செய்திகள்

சிறந்த வீரருக்கான விருதை வென்ற இங்கிலாந்து கேப்டன்

நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார்.

DIN

நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார்.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு பட்லர், அடில் ரஷித், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 73 ரன்களும் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 49 பந்துகளில் 80 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார் 32 வயது பட்லர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT