டெஸ்ட்: மதிய உணவு இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா
முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு ராகுலும் ஷுப்மன் கில்லும் 41 ரன்கள் சேர்த்தார்கள். எனினும் ஷுப்மன் கில் 20 ரன்களுக்கும் ராகுல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு விராட் கோலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 12, ரிஷப் பந்த் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.