முகப்பு
படம்: பிசிசிஐ
செய்திகள்

நம்பிக்கை அளிக்கும் அஸ்வின்: இந்தியா 348/7

வங்கதேசத்துக்கு எதிரான முதல்  டெஸ்டில் இரண்டாம் நாள் இடைவெளியின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்துள்ளது

செய்திகள்

நம்பிக்கை அளிக்கும் அஸ்வின்: இந்தியா 348/7

வங்கதேசத்துக்கு எதிரான முதல்  டெஸ்டில் இரண்டாம் நாள் இடைவெளியின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்துள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
படம்: பிசிசிஐ
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான முதல்  டெஸ்டில் இரண்டாம் நாள் இடைவெளியின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்துள்ளது

சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு ராகுலும் ஷுப்மன் கில்லும் 41 ரன்கள் சேர்த்தார்கள். எனினும் ஷுப்மன் கில் 20 ரன்களுக்கும் ராகுல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு விராட் கோலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இன்று 4,000 ரன்களைப் பூர்த்தி செய்த ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50-வது சிக்ஸரை அடித்தார். 54 இன்னிங்ஸில் இந்த எண்ணிக்கையை அடைந்து குறைந்த இன்னிங்ஸில் 50 சிக்ஸர்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து மெஹிதி ஹசன் பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். 

தனது வழக்கமான நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தார் புஜாரா. பந்த் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் புஜாராவுக்கு நல்ல இணையாக விளங்கினார். இருவரும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.

 புஜாரா 125 பந்துகளிலும் ஷ்ரேயஸ் 93 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 149 ரன்கள் சேர்த்தார்கள்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, தைஜுல் இஸ்லாம் பந்தில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் நாளின் கடைசிப் பந்தில் அக்‌ஷர் படேல் 14 ரன்களில் மெஹிதி ஹசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி வெறும் 4 ரன்கள் மட்டுமே கூடுதலாக சேர்ந்த நிலையில், 86 ரன்களில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

தொடர்ந்து அஸ்வினும், குல்தீப் யாதவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அஸ்வின் 81 பந்துகளில் 40 ரன்களும், குல்தீப் 76 பந்துகளில் 21 ரன்களும் எடுத்துள்ளனர்.

இரண்டாம் நாள் தேநீர் இடைவெளியின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா.

தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளியும் மெஹிதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்கள்.  

முழு கட்டுரையைப் படிக்க →