செய்திகள்

15 ரன்களுக்கு ஆல் அவுட்: டி20-யில் மோசமான சாதனைப் படைத்த அணி

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சிட்னி தண்டர் அணி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது. 

DIN

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சிட்னி தண்டர் அணி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் டி20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. 

அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

பின்னர் 140 ரன்கள் இலக்குடன் விளையாடிய சிட்னி தண்டர் அணி, அடிலெய்டு அணியின் அபார பந்துவீச்சு காரணமாக 5.5 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்களுக்கு சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை சிட்னி அணி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT