செய்திகள்

3-0: டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை நொறுக்கிய இங்கிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியுள்ளது...

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியுள்ளது ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி.

முதல் இரு டெஸ்டுகளை இங்கிலாந்து அணி ஏற்கெனவே வென்ற நிலையில் கராச்சியில் 3-வது டெஸ்ட் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 304 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 216 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளும் 2-வது இன்னிங்ஸில் அறிமுக வீரர் ரெஹான் அஹமது 5 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 111 ரன்கள் எடுத்தார்.

3-வது டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-வது நாளான இன்று 28.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இதனால் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது. இந்த டெஸ்டுடன் பாகிஸ்தான் வீரர் அசார் அலி ஓய்வு பெற்றுள்ளார். 

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியடைந்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மேலும் சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 டெஸ்டுகளிலும் தோல்வியடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT