செய்திகள்

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸா?

பிரபல வீரர் பென் ஸ்டோக்ஸைத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

DIN

ஐபிஎல் 2023 வீரர்களுக்கான ஏலத்தில் பிரபல வீரர் பென் ஸ்டோக்ஸைத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அவர்களில் அணிகளின் விருப்பத்துக்கேற்ப 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.  

இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை ரூ. 18.50 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். கேம்ரூன் கிரீனை ரூ. 17.50 கோடிக்கு மும்பையும் நிகோலஸ் பூரனை ரூ. 16 கோடிக்கு லக்னெளவும் தேர்வு செய்துள்ளன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. இதனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக் கூடிய ஒரு வீரர் சிஎஸ்கேவுக்குக் கிடைத்துள்ளார்.

மேலும் தோனிக்கு அடுத்ததாக சிஎஸ்கேவின் கேப்டனாகவும் ஸ்டோக்ஸைக் கருதலாம் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக உள்ள பென் ஸ்டோக்ஸ், 2024 முதல் சிஎஸ்கேவின் கேப்டனாகச் செயல்படவும் வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி, அடுத்த கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்துள்ளதாகவே சிஎஸ்கே ரசிகர்கள் எண்ணுகிறார்கள். ரசிகர்களின் கனவு பலிக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT