செய்திகள்

அஸ்வின், ஷ்ரேயஸ் வெற்றிக்கூட்டணி: இந்தியா 2வது டெஸ்டிலும் வெற்றி! 

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் வங்கதேசம் - இந்திய அணிகள் மோதியது. 

முதல் டெஸ்ட்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இரண்டாவது ஆட்டம் மிா்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 227 ரன்களையும் , இந்தியா 314 ரன்களையும், எடுத்திருந்தன. ஆட்டத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை இரண்டாவது இன்னிங்ஸில் 70.2 ஓவா்களில் வங்கதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  3ம் நாள் முடிவில் இந்தியா இரண்டாம் இன்னிங்ஸில் 45/4 ரன்களுடன் தள்ளாடி வந்தது. 

4வது நாளான இன்று ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயா், அஸ்வினை நம்பி இருந்தது. பெரிதும் எதிர்பார்த்த ரிஷப் பந்த் 9 ரன்களில் மெஹதி ஹாசன் ஓவரில் எல்பிடபில்யூ ஆனார். 

அஸ்வின், ஷ்ரேயஸ் ஐயா் வெற்றிக்கூட்டணி: 

பின்னர் ரவிசந்திரன் அஸ்வின், ஷ்ரேயஸ் ஐயா் நிதானமாக ஆடி வெற்றிக் கூட்டணி அமைத்தனர். அஸ்வின் 42 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 29 ரன்களும் எடுத்தனர். 8வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 71 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். இது இரண்டாவது அதிகபட்ச பாட்னர்ஷிப் என்பது குறிப்பிட்டத்தக்கது. 

இதற்கு முன் 4வது நாளில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் 1932இல் அமர் சிங்- லால் சிங் ஜோடி 74 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் தொடரினை 2-0 என் இந்திய அணி வென்றுள்ளது. 

ரவிசந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகனாகவும், புஜாரா தொடர்நாயகனாகவும்  தேர்வு செய்யப்பட்டார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT