செய்திகள்

145 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக...: பாகிஸ்தான் அணி செய்த சம்பவம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக முதல் நாளின் முதல் இரு விக்கெட்டுகளும் ஸ்டம்பிங்கினால் வீழ்ந்துள்ளது.

DIN

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக முதல் நாளின் முதல் இரு விக்கெட்டுகளும் ஸ்டம்பிங்கினால் வீழ்ந்துள்ளது.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், கராச்சியில் இன்று தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சமீபகாலமாக சொந்த மண்ணில் தொடர்ந்து 4 டெஸ்டுகளில் தோற்ற பாகிஸ்தான் அணி, இந்த டெஸ்டில் பிரபல விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஸ்வானை நீக்கி, சர்ஃபராஸ் அஹமதுவை அணியில் சேர்த்துள்ளது. அவர் கடைசியாக 2019 ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். மேலும் முதல்முறையாக பாகிஸ்தானில் டெஸ்ட் விளையாடுகிறார். 2018-ல் ஒரு டெஸ்டில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மிர் ஹம்சாவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸில் முதல் இரு விக்கெட்டுகளும் ஸ்டம்பிங்கினால் வீழ்ந்தன. அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சிலும் ஷான் மசூத் 3 ரன்களில் பிரேஸ்வெல் பந்துவீச்சிலும் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்கள். 

145 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இரு விக்கெட்டுகள் ஸ்டம்பிங்கினால் வீழ்த்தப்பட்டுள்ளன. இதனால் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பிளண்டல் இச்சாதனையில் பங்களித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT