செய்திகள்

இலங்கை தொடா்: இந்திய அணிகள் அறிவிப்பு

இலங்கை அணியுடன் ஜனவரில் டி20 மற்றும் ஒரு நாள் தொடா்களில் விளையாடவிருக்கும் இந்திய அணிகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.

DIN

இலங்கை அணியுடன் ஜனவரில் டி20 மற்றும் ஒரு நாள் தொடா்களில் விளையாடவிருக்கும் இந்திய அணிகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில், டி20 அணி கேப்டனாக ஹாா்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளாா். அந்தத் தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட, ஒரு நாள் தொடரில் ஷிகா் தவனுக்கு இடமளிக்கப்படவில்லை. இரு தொடா்களில் இருந்தும் ரிஷப் பந்த்துக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

டி20 ஆட்டங்கள் ஜனவரி 3 (மும்பை), 5 (புணே), 7 (ராஜ்கோட்) ஆகிய நாள்களிலும், ஒரு நாள் ஆட்டங்கள் ஜனவரி 10 (குவாஹாட்டி), 12 (கொல்கத்தா), 15 (திருவனந்தபுரம்) ஆகிய நாள்களிலும் நடைபெறவுள்ளன.

டி20 அணி: ஹாா்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷண், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூா்யகுமாா் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தா், யுஜவேந்திர சஹல், அக்ஸா் படேல், அா்ஷ்தீப் சிங், ஹா்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமாா்.

ஒரு நாள் அணி: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல், இஷான் கிஷண், ஹாா்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தா், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அா்ஷ்தீப் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT