செய்திகள்

ஆஷஸ் தோல்வி: இங்கிலாந்து பயிற்சியாளர் நீக்கம்

DIN


ஆஷஸ் தொடரில் 0-4 என மோசமாகத் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டை நீக்கியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 0-4 எனத் தோற்றது இங்கிலாந்து. இதையடுத்து இந்தத் தோல்வியிலிருந்து இங்கிலாந்து அணி மீண்டெழுவது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் பரிந்துரைகளின்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட்டும் உதவிப் பயிற்சியாளராக கிரஹாம் தோர்ப்பும் பணியாற்றினார்கள்.

ஆஷஸ் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய நிர்வாகிகளின் தலைமையில் இங்கிலாந்து அணி புதிய பயணத்துக்குத் தயாராகியுள்ளது. 

ஆஷஸ் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவர் பயிற்சியாளராக இருந்த கடைசி 14 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி 10 தோல்விகளைக் கண்டுள்ளது. இதையடுத்து அவருடைய பதவியைப் பறித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

மார்ச் 8 முதல் மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அடுத்த வாரம் தேர்வு செய்யப்படும். பிப்ரவரி 24 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு இங்கிலாந்து வீரர்கள் புறப்படுவார்கள். பயிற்சியாளர் பதவியிலிருந்து சில்வர்வுட் நீக்கப்பட்டுள்ளதால் மே.இ. தீவுகள் டெஸ்ட் தொடருக்குத் தற்காலிகப் பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார். அதன்பிறகு முழு நேரப் பயிற்சியாளரை ஈசிபி நியமிக்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT