செய்திகள்

முதல் ஒருநாள்: ஆமதாபாத்தில் பயிற்சி மேற்கொண்ட இந்திய அணி (படங்கள்)

ஆமதாபாத்தில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்துக்காக இந்திய அணியினர் ஆமதாபாத்தில் இன்று பயிற்சி மேற்கொண்டார்கள்.

DIN

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. இரு தொடர்களுக்கும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 

ஒருநாள் தொடருக்காக ஆமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சைனி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், பாதுகாப்பு அதிகாரி பி. லோகேஷ், மசாஜ் நிபுணர் ராஜீவ் குமார் என ஒட்டுமொத்தமாக ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஆமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குகிறார்கள்.

ஆமதாபாத்தில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்துக்காக இந்திய அணியினர் ஆமதாபாத்தில் இன்று பயிற்சி மேற்கொண்டார்கள். அதன் படங்கள்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT