கோப்புப்படம் 
செய்திகள்

யு19 உலகக்கோப்பை சாம்பியன் இந்தியா: பிரதமர் மோடி வாழ்த்து

ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குள்பட்டோருக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.

உலகக்கோப்பை வென்ற இளம் இந்திய அணிக்கு நாடு முழுவதிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் பதிவு: 

"இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். தொடர் முழுவதும் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான மற்றும் திறமையான கரங்களில் உள்ளதை இது வெளிப்படுத்துகிறது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து! பயணிகள் காயம்!

பொங்கலுக்கு விறுவிறுப்பாய் விற்பனையாகும் கொத்து மஞ்சள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்! பொங்கல் வாழ்த்து தெரிவித்த EPS

சபரிமலையில் இயக்குநர் ரத்னகுமார் இருமுடி கட்டி தரிசனம்!

இர்ஃபானின் வாகை சூட வா தொடரின் ஒளிபரப்பு நேரம்!

SCROLL FOR NEXT