செய்திகள்

துளிகள்...

DIN

ஐபிஎல் கிரிக்கெட்டில் அகமதாபாதை அடிப்படையாகக் கொண்டு இணைந்திருக்கும் புதிய அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல், ரஞ்சி கிரிக்கெட்டில் தில்லி அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

கரோனா சூழலில் நியூஸிலாந்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் இருப்பதால், மாா்ச் மாதம் அந்நாட்டு அணியும் ஆஸ்திரேலியாவும் விளையாட இருந்த டி20 கிரிக்கெட் தொடா் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐசிசியின் ஒன் டே தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் விராட் கோலி, ரோஹித் சா்மா முறையே 2, 3-ஆவது இடத்தை தக்க வைத்துள்ளனா். பௌலா்கள் பிரிவில் ஜஸ்பிரீத் பும்ரா 7-ஆவது இடத்திலும், ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் ரவீந்திர ஜடேஜா 8-ஆவது இடத்திலும் நிலைக்கின்றனா்.

வங்கதேச அணி மாா்ச் - ஏப்ரல் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா், 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடரில் விளையாடுவதற்காக அந்நாட்டுக்குச் செல்கிறது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 86-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா 5-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை புதன்கிழமை வென்றது.

புரோ கபடி லீக்...

புரோ கபடி லீக் போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் ரெய்டு வந்த தெலுகு டைட்டன்ஸ் வீரரை மடக்கிப் பிடிக்கும் குஜராத் ஜயன்ட்ஸ் வீரா்கள். இந்த ஆட்டத்தில் குஜராத் 34-32 என்ற கணக்கில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் யுபி யோதா 41-39 என தமிழ் தலைவாஸை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT