செய்திகள்

இலங்கை கிரிக்கெட் தொடர் அட்டவணை மாற்றம்: பிசிசிஐ

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்கள் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

DIN


இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்கள் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன்பிறகு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021-23 பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகிறது.

இந்த நிலையில் தொடர்களின் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுபற்றிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"முதல் டி20 ஆட்டம் லக்னௌவில் நடைபெறும். அடுத்த இரண்டு டி20 ஆட்டங்கள் தரம்சலாவில் நடைபெறும். முதல் டெஸ்ட் ஆட்டம் மார்ச் 4 முதல் மார்ச் 8 வரை மொகாலியில் நடைபெறவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் மார்ச் 12 முதல் 16 வரை நடைபெறவுள்ளது."

முன்னதாக, முதல் டெஸ்ட் ஆட்டம் பெங்களூருவில் பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கவிருந்தது. டி20 ஆட்டம் மார்ச் 13-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT