ரோஹித் சர்மா 
செய்திகள்

டி20யில் அதிக ரன்கள்: ரோஹித், கோலி இடையே கடும் போட்டி

கோலி 95 ஆட்டங்களில் 3227 ரன்களும் ரோஹித் 119 ஆட்டங்களில் 3197 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

DIN

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார்?

கிறிஸ் கெயில் என்று பலரும் பதில் சொல்வார்கள்.

இந்தப் பதில் ஐபிஎல் போட்டிக்குக்கூட பொருந்தாது.

ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தான் கெயிலுக்கு முதலிடம். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் நியூசிலாந்தின் மார்டின் கப்திலுக்கு முதலிடம். 112 ஆட்டங்களில் 3299 ரன்கள் எடுத்துள்ளார். 

கப்திலின் சாதனையை இந்தியாவின் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் எப்போது வேண்டுமானாலும் தாண்டிச் செல்லும் நிலைமையில் தான் உள்ளார்கள்.

கோலி 95 ஆட்டங்களில் 3227 ரன்களும் ரோஹித் 119 ஆட்டங்களில் 3197 ரன்களும் எடுத்துள்ளார்கள். கப்திலின் ரன்களைத் தாண்ட கோலிக்கு 72 ரன்களும் ரோஹித்துக்கு 102 ரன்களும் தேவைப்படுகின்றன.

எனவே இன்றைய ஆட்டத்தில் அல்லது இந்த டி20 தொடரில் கப்திலின் சாதனையை கோலியும் ரோஹித் சர்மாவும் தாண்டிச் செல்வார்கள் என எதிர்பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT