செய்திகள்

சூதாட்ட விளம்பரத்தில் நானா?: சச்சின் டெண்டுல்கர் விளக்கம்

சூதாட்டம், மது, புகையிலை போன்றவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நான் ஒருபோதும் விளம்பரம் தந்ததில்லை.

DIN

சூதாட்ட விளம்பரத்தில் ஒருபோதும் இடம்பெற்றதில்லை எனப் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

சூதாட்ட விளம்பரங்களில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றிருப்பது போன்ற படங்கள் வெளியானதால் இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

முகத்தை மாற்றி கேசினோவுக்கு நான் விளம்பரம் செய்வது போன்ற படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருப்பது என் கவனத்துக்கு வந்துள்ளது.  

சூதாட்டம், மது, புகையிலை போன்றவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தனிப்பட்டமுறையில் நான் ஒருபோதும் விளம்பரம் தந்ததில்லை. மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக என்னுடைய படங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்கு வேதனையைத் தருகிறது.

என்னுடைய சட்டக்குழுவினர் உகந்த நடவடிக்கையை எடுப்பார்கள். இத்தகவலை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என எண்ணியதால் இதை வெளியிடுகிறேன் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

SCROLL FOR NEXT