செய்திகள்

ஆளில்லா மைதானத்தில் கோலியின் 100-வது டெஸ்ட்

இந்தியா, இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரை நேரில் காண பார்வையாளர்களுக்கு பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளது.

DIN


இந்தியா, இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரை நேரில் காண பார்வையாளர்களுக்கு பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இது விராட் கோலியின் 100-வது டெஸ்ட். இந்த தொடருக்கு பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிரிக்கெட் சங்க பொருளாளர் ஆர்பி சிங்கலா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:

"பிசிசிஐ வழிகாட்டுதலின்படி டெஸ்ட் ஆட்டத்தைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மொகாலியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், ரசிகர்கள் நிச்சயம் இதைத் தவறவிடுவார்கள்.

ஆனால், மொகாலியைச் சுற்றி இன்னும் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கின்றன. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதுவே சிறந்தது. எனினும், பிசிசிஐ வழிகாட்டுதலின்படி ஆட்டத்தின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ விராட் கோலியை கௌரவிக்க பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷாவ்மி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT