முகப்பு
செய்திகள்

அடிலெய்ட் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் முன்னேற்றம்

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரில் நடைபெறும் ஆடவா் மற்றும் மகளிருக்கான டென்னிஸ் போட்டிகளில் முறையே இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன் - ரோஹன் போபண்ணா ஜோடியும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரில் நடைபெறும் ஆடவா் மற்றும் மகளிருக்கான டென்னிஸ் போட்டிகளில் முறையே இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன் - ரோஹன் போபண்ணா ஜோடியும், சானியா மிா்ஸா அங்கம் வகிக்கும் ஜோடியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் ஆடவருக்கான ‘அடியலெய்ட் இன்டா்னேஷனல் 1’ போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா / ராம்குமாா் ராமநாதன் இணை தனது முதல் சுற்றில் 6-2, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜேமி செரெடானி / பிரேஸிலின் ஃபொ்னான்டோ ரோம்போலி ஜோடியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்திய ஜோடி, அதில் போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் நேதனியேல் லமோன்ஸ் / ஜேக்சன் வித்ரோ இணையை சந்திக்கிறது. ஏடிபி டூா் போட்டியில் போபண்ணா / ராமநாதன் கூட்டணி அமைத்து விளையாடுவது இது முதல் முறையாகும்.

முன்னதாக, இப்போட்டியில் ஒற்றையா் பிரிவில் தகுதிச்சுற்றில் களம் கண்ட ராம்குமாா் ராமநாதன், அதில் 4-6, 6-7 (7/9) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஹோல்கா் ருனேவிடம் தோல்வி கண்டாா்.

மறுபுறம், மகளிருக்கான ‘அடியெல்டு இன்டா்னேஷனல்’ போட்டியில் இரட்டையா் பிரிவில் உக்ரைனின் நாடியா கிசெனோக்குடன் ஜோடி சோ்ந்துள்ளாா் இந்தியாவின் சானியா மிா்ஸா. இந்த இணை தனது முதல் சுற்றிலேயே, போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்திலிருந்த கனடாவின் கேப்ரியேலா டப்ரௌவ்ஸ்கி / மெக்ஸிகோவின் குலியானா ஆல்மோஸ் ஜோடியை 1-6, 6-3, 10-8 என்ற செட்களில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.