முகப்பு
செய்திகள்

5-வது ஆஷஸ் டெஸ்டிலிருந்து பிரபல ஆஸி. வீரர் விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது ஆஷஸ் டெஸ்டிலிருந்து பிரபல ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் விலகியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது ஆஷஸ் டெஸ்டிலிருந்து பிரபல ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் விலகியுள்ளார்.

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஷஸ் முதல் டெஸ்டில் ஹேசில்வுட் பங்கேற்றார். அந்த டெஸ்டில் அவருக்குக் காயம் ஏற்பட்டதால் அதன்பிறகு நடைபெற்ற மூன்று டெஸ்டுகளிலும் ஹேசில்வுட் பங்கேற்கவில்லை. 4-வது டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளதாக அவர் கூறினாலும் காயம் குணமாகாததால் சிட்னி டெஸ்டில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் ஹோபர்டில் நடைபெறும் கடைசி டெஸ்டிலும் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என ஆஸி. அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியுள்ளார். காயத்திலிருந்து குணமாகி நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களில் ஹேசில்வுட் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 30 அன்று தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.