மெல்போா்ன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் நடால்
மெல்போா்ன் ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரா் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளாா்.
மெல்போா்ன் ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரா் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளாா்.
ஆஸி. ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டத்தில் பின்லாந்தின் எமில் ருஸுவோரியை 6-4, 7-5 என்ற நோ் செட்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
இறுதி ஆட்டத்தில் நடால் வென்றால் இது அவரது 89-ஆவது கோப்பையாகும். கடைசியாக 2021 ஆகஸ்ட் மாதம் சிட்டி ஓபன் போட்டியில் ஆடினாா் நடால். அமெரிக்க வீரா் மேக்ஸிம் கிரெஸியுடன் இறுதிச் சுற்றில் மோதுகிறாா் நடால்.
இரண்டாவது அரையிறுதியில் கிரெஸி 7-5, 7-6 என பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை போராடி வென்றாா்.
அனிஸிமோவா தகுதி:
மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் அமென்டா அனிஸிமோவா 6-2, 6-0 என்ற செட் கணக்கில் டேரியா கஸட்கினாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.