செய்திகள்

விக்கெட் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ராஸ் டெய்லர்

பிரபல நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

DIN

பிரபல நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

37 வயது ராஸ் டெய்லர் 2006 முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி 112 டெஸ்டுகள், 233 ஒருநாள், 102 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். டெஸ்டில் 19 சதங்கள், 35 அரை சதங்களுடன் 7683 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ஒருநாள் சதம், அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரரும் டெய்லர் தான். 

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடி ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த மாத இறுதியில் அறிவித்தார். தனது கடைசி டெஸ்டை இன்று விளையாடியுள்ள டெய்லர், கடைசி ஒருநாள் ஆட்டத்தை ஏப்ரல் 4 அன்று விளையாடவுள்ளார். நவம்பர் 2020-க்குப் பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டெய்லர் விளையாடவில்லை. 

கடைசி டெஸ்டில் 28 ரன்கள் எடுத்த டெய்லர், வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி சிறப்பான முறையில் தனது டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். 

நன்றாக விளையாடி 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றோம். வங்கதேச அணி எங்களுக்கு அழுத்தம் தந்தது. எங்களுடைய சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணிக்கு அழுத்தம் தந்தோம். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அணியினருக்கும் மிகவும் உணர்வுபூர்வமான ஆட்டம் இது. கடைசியாக விக்கெட் எடுத்து அபாரமான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றுள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT