செய்திகள்

ஐபிஎல் விளம்பரதாரர்கள்: டிஎல்எஃப் முதல் டாடா வரை!

DIN

ஐபிஎல் போட்டியின் புதிய விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியின் முதல் விளம்பரதாரராக டிஎல்எஃப் 2008 முதல் 2012 வரை இருந்தது. இதன்பின்னர் பெப்சி நிறுவனம் ரூ. 396 கோடியில் 5 வருடங்களுக்கு ஐபிஎல் விளம்பரதாரராகத் தேர்வானது. ஆனால் 2016, 2017ம் வருடங்களில் பெப்சியிடமிருந்த ஒப்பந்தம் விவோ நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வருடத்துக்கு ரூ. 100 கோடி மட்டுமே வழங்கியது விவோ. 

2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக விவோ நிறுவனம் மீண்டும் தேர்வானது. அடுத்த 5 வருடங்களுக்கு விவோ நிறுவனம் பிசிசிஐ-க்கு ரூ. 2200 கோடி (வருடத்துக்கு ரூ. 440 கோடி) வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. இது உண்மையிலேயே மிகப்பெரிய தொகை. கடந்த ஒப்பந்தத்தை விடவும் 554 சதவிகிதம் அதிகம்.

2020 ஜூன் மாதம் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. இதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐயும் விவோ நிறுவனமும் தங்களுடைய கூட்டணியை ரத்து செய்வதாக அறிவித்தன. 

ஐபிஎல் 2020 போட்டியின் புதிய விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனத்தைத் தேர்வானதாக ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்தார். ரூ. 222 கோடி வழங்க டிரீம் 11 நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். டிரீம் 11 நிறுவனம் நான்கு மாதங்கள் 13 நாள்களுக்கு ஐபிஎல் 2020 விளம்பரதாரராகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்பிறகு 2021 ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக விவோ நிறுவனம் மீண்டும் தேர்வானது.

இந்நிலையில் ஐபிஎல் விளம்பரதாரராக இருந்த விவோ தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு விட்டது. இதையடுத்து ஐபிஎல் போட்டியின் புதிய விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT